திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ளது இங்கு ஸ்ரீ வெங்கடேச பெருமாள்
பத்மாவதி தாயார் சக்கரத்தாழ்வார் லட்சுமி ஹயக்ரீவர் ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு கடவுள்களுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது மேலும் வருடம் தோறும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும் நிலையில் இன்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால் தயிர் பன்னீர் மஞ்சள் குங்குமம் உட்பட 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டு வெண்ணை காப்பு அலங்காரத்தில் காலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் பின்னர் 2008 வடை மாலை சாற்றி சிறப்பு
விசேஷ பூஜைகள் நடைபெற்றன பின்னர் பக்தர்களுக்கு வெண்ணை மற்றும் வடை பிரசாதமாக வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பதி கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்