திருப்பூர்: ரூ.89 ஆயிரம் மோசடி செய்த வாலிபர் கைது

0பார்த்தது
திருப்பூர்: ரூ.89 ஆயிரம் மோசடி செய்த வாலிபர் கைது
திருப்பூரை சேர்ந்தவர் தனபாக்கியம். இவர் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் இவரிடம் ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய தொகையை அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். வங்கியில் இருந்து நினைவூட்டுவதாக தனபாக்கியம் நினைத்தார். இந்தநிலையில் கடந்த 2023-ம் ஆண்டு தனபாக்கியத்தை, அஸ்வின் என்ற பெயரில் ஒருவர் தொடர்பு கொண்டு, உங்கள் கிரெடிட் கார்டுக்கு ரூ. 88 ஆயிரத்து 625 பில் வந்துள்ளது. அந்த தொகையை செலுத்துங்கள் என்றார். இதை நம்பிய தனபாக்கியமும் கிரெடிட் கார்டு கணக்கில் ரூ. 88 ஆயிரத்து 625-ஐ செலுத்தினார். சிறிது நேரத்தில் அந்த தொகை கிரெடிட் கார்டில் இருந்து வேறு ஒரு கணக்குக்கு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த தனபாக்கியம் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

 போலீசார் நடத்திய விசாரணையில் தீபக் மற்றும் மாரியப்பன் ஆகியோர் சேர்ந்து ஆன்லைன் மூலமாக தனபாக்கியத்தின் பணத்தை எடுத்தது தெரியவந்தது. இதில் மாரியப்பனை சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்தநிலையில் சென்னை அருகம்பாக்கத்தை சேர்ந்த தீபக் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போன், சிம்கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி