திருப்பூர்: ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம்..கலெக்டர் தகவல்

64பார்த்தது
திருப்பூர்: ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம்..கலெக்டர் தகவல்
இந்திய ராணுவப்படையில் உள்ள அக்னிவீர் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு கடந்த 12-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுநிலை தகுதி, மருத்துவ தகுதி நிலைகள், உடற்தகுதி நிலைகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், இணையதள விண்ணப்பங்கள் நிரப்புவதற்கான வழிமுறைகள் மற்றும் அக்னிவீர் ஆட்சேர்ப்பு பதிவு பற்றி விரிவான தகவல்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி