திருப்பூர்: ரெயில் மோதி தொழிலாளி பலி

75பார்த்தது
திருப்பூர்: ரெயில் மோதி தொழிலாளி பலி
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சத்ரன்குமார் (வயது 21). இவர் அம்மாபாளையம் பகுதியில் தங்கி டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தார். நேற்று திருப்பூர் கூட்செட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி