திருப்பூரில் இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு

5149பார்த்தது
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று இரண்டாவது நாளாக
பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சான்றிதழ் வழியங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையாக நிதி ஒதுக்கீட்டினை செய்ய வேண்டும். அதீத பணிநெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்த்து சிட்டாப்பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். வட்டாட்சியர் அலுவலகம் உட்பட 10 அரசு அலுவலகங்களில் வருவாய்த்துறை அலுவலர்களில் இன்று இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வருவாய் துறை பணிகள் இன்று இரண்டாவது நாளாக தேக்கமடைந்துள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி