குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

57பார்த்தது
குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருப்பூர் கே. எஸ். சி. பள்ளி ரோட்டில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டுள்ளன. மேலும் ரோட்டின் பெரும்பாலான இடங்கள் மண் மேடுகளாக உள்ளன.
இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங் களை ஒட்டி செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தட்டுத்தடுமாறியபடி வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.
இந்த பகுதியில் அமைந்துள்ள கே. எஸ். சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த சாலை யைத்தான் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் தாராபுரம் ரோட்டில் இருந்து மாநகருக்குள் வரும் வாகன ஓட்டிகள் பெரும்பாலானோர் இந்த சாலை வழியாக வரு கின்றனர். தற்போது பள்ளிகள் திறப்பிற்கு இன்னும் சில தினங் களே இருப்பதால் மாணவ, மாணவிகளின் நலன் கருதி இங்கு நடைபெற்று வரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

:

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி