திருப்பூர் கே எஸ் சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் தொடர்ந்து தாக்கிக் கொள்ளும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளி நேரத்தில் தெற்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை ஒன்று சேர்ந்த மாணவர்கள் ஒரு மாணவரை மட்டும் கடுமையாக தாக்க துவங்கினர் இதனை கண்ட போலீசார் அவர்களை பிடிக்க சென்றபோது அனைத்து மாணவர்களும் தலைதெறிக்க ஓடி தப்பித்தனர். இந்த சம்பவம் குறித்து தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.