கருமாரம்பாளையத்தில் கால்வாயில் வீணாக பாயும் குடிநீர்

69பார்த்தது
கருமாரம்பாளையத்தில் கால்வாயில் வீணாக பாயும் குடிநீர்
திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையத்தில் சாலையின் நடுவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து வெளியேறும் குடிநீர் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் பாய்ந்து கொண்டிருக்கிறது. 

நாள் முழுவதும் பாய்வதால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் யாருக்கும் பயனின்றி வீணாகி வருகிறது. மேலும் சாலையில் பெரிய குழி இருப்பதால் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. 

குடிநீர் குழாய் உடைந்து சுமார் 2 வாரங்களுக்கு மேலாகியும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் குடிநீர் வினியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் குழாய் உடைப்பை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

தொடர்புடைய செய்தி