திருப்பூர் திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாட்டம். விஜய் மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் விமல் அதிரடி.
ஓவியா லெப்ட் ஹேண்டில் டீல் செய்தார் என கருத்து.
நடிகர் விமல் நடித்த சார் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு வந்த நடிகர் விமல் இயக்குனர் போஸ் வெங்கட் உள்ளிட்ட படக் குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டு களித்தனர் பின்னர் கேக் வெட்டி படத்தின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது நடிகர் விமல் கூறுகையில் சார் திரைப்படம் வெற்றியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் இது போன்ற சிறிய திரைப்படங்கள் வெற்றி பெறுவது திரைத்துறையை மேலும் ஊக்குவிக்கும் என தெரிவித்தார். விஜய் மாநாட்டிற்கு விஷால் செல்வேன் என கூறியது வரவேற்கத்தக்க விஷயம் தான் எனக்கு அந்த நேரத்தில் படப்பிடிப்பு இருக்கும் காரணத்தால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்தார்.
இறுதியாக ஓவியா குறித்த கேள்விக்கு அவர் லெப்ட் ஹேண்டில் அதனை டில் செய்துவிட்டார் அதை பற்றி சொல்வதற்கு இல்லை என தெரிவித்தார்.