திருப்பூர்: கிராம நிர்வாக அதிகாரிகள் 8-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

69பார்த்தது
திருப்பூர்: கிராம நிர்வாக அதிகாரிகள் 8-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் ஆர். டி. ஓ. அலுவலகத்தில் நேற்று (மார்ச் 12) கிராம நிர்வாக அதிகாரிகள் 8-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இணைய வழி சான்றுகளுக்கு பரிந்துரை செய்ய 2 கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு ஒரு பயனர் எண் மற்றும் கடவுச்சொல் கொடுக்கப்பட்டுள்ளது. 

தெற்கு தாலுகா பகுதியில் பணிபுரிந்து வரும் ஒரு கிராம நிர்வாக அதிகாரி மற்றொரு கிராம நிர்வாக அதிகாரிக்கு கடவுச்சொல் வழங்க மறுப்பதாக கூறி மேற்கு மண்டல செயலாளர் பிரபு தலைமையில் கடந்த 5-ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திக்கேயன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று (மார்ச் 12) 8-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பயனர் எண் மற்றும் கடவுச்சொல் கிராம நிர்வாகிகளுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி