விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரம்மாண்ட பேனரால் பரபரப்பு

81பார்த்தது
திருப்பூர் நகரின் மத்தியில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் மாநாடு அக்டோபர் இரண்டாம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் முன்பாக உள்ள ரவுண்டானா பகுதியில் பிரம்மாண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது இதில் வருங்கால முதல்வரே என தொல் திருமாவளவனை குறிப்பிட்டும் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என முதன்மையாக குறிப்பிட்டு மாநாடு குறித்த அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடந்த சில நாட்களாக ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என குரல் எழுப்பி வருவதும், இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில் ஆட்சியில் பங்கு கோருவது ஜனநாயக ரீதியில் எந்த தவறும் இல்லையே எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி