திருப்பூர் மாநகர துணை கமிஷ்னரிடம் தொ. மு. க. சார்பில் ஈ. பி. அ. சரவணன் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: - திருப்பூர் மாநகர பகுதியில் நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இதுபோன்ற வாகனங்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிடுவதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே திருப்பூர் மாநகர பகுதியிலுள்ள அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனை நடத்தி நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.