திருப்பூர் பாரப்பாளையத்தில் நாளை வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா திருப்பூர்-ஊத்துக்குளி ரோட்டில் பாரப்பாளையத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக மாநில அவை தலைவர் பி. எஸ். மணி தலைமை தாங்குகிறார்.
பொதுச்செயலாளர் கே. ராமகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் முத்து என்கிற பேச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். முன்னாள் கவுன்சிலர் பி. எம். சின்னசாமி மற்றும் கட்டபொம்மன் என்கிற ராஜேந்திரன், சரவணன், நஞ்சப்பன், மோகன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை தொட்டராஜ், ரத்தினசாமி ஆகியோர் செய்து வருகிறார்கள்