திருப்பூர் ஆன்லைன் மூலம் வலிநிவாரணி மாத்திரை வாங்கி விற்பனை செய்த 2 பேர் கைது. திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (21), அஜித் (21) என்ற இருவரும் மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி ஆன்லைன் மூலம் வலிநிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை போதை மாத்திரையாக 200 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் குமார் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் கொரியர் நிறுவனத்தில் பார்சல் பெற்ற போது இருவரையும் கைது அவர்களிடமிருந்து 200 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.