ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படும் என்று அதிகாரி தகவல். ரம்ஜான் பண்டிகை நாளை (மார்ச்.29) கொண்டாடப்பட உள்ளது. இதனால் தெற்கு ரெயில்வேயின் சேலம் கோட்டத்தில் உள்ள கணினி மயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு அமைப்பு மையங்கள் நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.