வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரிப்பு

64பார்த்தது
வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரிப்பு
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவால் விலை அதிகரித் துள்ளது. இது குறித்து ஒரு வியாபாரி கூறிய தாவது: - தென்னம்பைாளயம் மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக சுற்றுவட்டார கிராமங்க ளிலிருந்து தக்காளி வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது வரத்து குறைந்துள்ளது. வெளிமாவட்டங்களில் இருந் தும் வரத்து குறைந்தே காணப்படுகிறது. கடந்த மாதங்களில் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ. 150 முதல் ரூ. 250 வரை இருந்த நிலையில், தற்போது
ரூ. 450 வரை சென்றது. மேலும் வெளிமாவட் டங்களில் இருந்து வரும் 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ. 1, 000 வரை சென்றது. வரத்து குறைந்ததால் மார்க்கெட் டிற்கு விற்பனைக்கு வரும் தக்காளியை வியா பாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்ற னர். தற்போது தக்காளி சில்லறை விற்பனை யாக ஒரு கிலோ ரூ. 50 வரை விற்பனையா கிறது. தக்காளி விலை அதிகரித்தும் விளைச் சல் இல்லாததால் வியாபாரிகள் கவலைய டைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி