திருப்பூர்: கோரவிபத்து..அரசு பள்ளி ஆசிரியை, மாணவி பலி

62பார்த்தது
திருப்பூர்: கோரவிபத்து..அரசு பள்ளி ஆசிரியை, மாணவி பலி
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்த அஜித்குமார் என்பவர் இன்று (டிசம்பர் 11) காலை டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். டிராக்டருக்கு பின்னால் அரசுப்பள்ளி ஆசிரியை சரஸ்வதி தனது டூவீலரில், அதே பள்ளியில் படிக்கும் ராகவி, யாழினி ஆகிய 2 மாணவிகளையும் தன்னுடன் கூட்டிச் சென்றுள்ளார். 

அப்போது டிராக்டரை முந்த முயன்ற போது, டிரைவர் திடீரென வலதுபக்கமாக திருப்பியதால் விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த ஆசிரியை சரஸ்வதி, மாணவி ராகவி உயிரிழந்தனர். யாழினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்ததுடன் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி