திருப்பூர்: சாலை தடுப்பால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

58பார்த்தது
திருப்பூர்: சாலை தடுப்பால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
திருப்பூர் லட்சுமி நகர் பகுதி வாகனப் போக்குவரத்துடன் பரபரப்பாக இயங்கும் முக்கிய பகுதியாகும். இங்கு கோயில் மற்றும் வணிக வளாகங்கள் அதிக அளவில் உள்ளன. அப்பகுதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில் உள்ளதால் பக்தர்கள் வந்து வண்ணமாக இருப்பார்கள். 

லட்சுமி நகரிலிருந்து டி.எம்.எஸ் பாலம் செல்லும் பாதை கரடுமுரடாக காணப்படுகிறது. இப்பாதைக்கும் லட்சுமி நகருக்கு செல்லும் சாலைக்கும் இடையே இணைப்புப் பாலம் உள்ளது. அதில் சில மாதங்களுக்கு முன்பாகவே பள்ளம் ஏற்பட்டு அதனை சரிசெய்யாமல் உள்ளனர். அதற்காக பாலத்தின் குறுக்கே இரும்புத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. 

தற்போது கோடைக் காலம் முடிந்து பள்ளிகள் திறந்துவிட்டதால் பள்ளி வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அந்தப் பாதையில் தான் செல்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஒருசிலர் இரும்புத் தடுப்பில் மோதி சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. 

மேலும் பள்ளி குழந்தைகள் குறித்த நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்து சாலை குறுக்கே வைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி