திருப்பூர்: நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவரதடை விதிக்க வேண்டும்; கலெக்டர்

83பார்த்தது
திருப்பூர்: நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவரதடை விதிக்க வேண்டும்; கலெக்டர்
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஊத்துக்குளி அருகே சர்க்கார் கத்தாங்கண்ணி வெண்கலபாளையம் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: - வெண்கலபாளையம் கிராமத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் குடிநீருக்காக நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர். 

இந்த நிலையில் தனி நபருக்கு சொந்தமான நிலத்திற்கு நொய்யல் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வர 2 கிலோ மீட்டருக்கு குழாய் போடப்பட்டுள்ளது. எனவே தனிநபர் தண்ணீர் கொண்டு வர தடை விதிக்க வேண்டும். மனு கொடுத்ததின் பேரில் இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நொய்யலில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல அனுமதி கொடுத்தால் நீர்நிலைகள் அனைத்தும் பாதிப்படையும். ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வராமல் இரவு நேரங்களில் ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர வாய்ப்புள்ளது. 

எனவே அவ்வாறு தண்ணீர் கொண்டு வர தடை விதிப்பதுடன், தண்ணீர் கொண்டு வர போடப்பட்டுள்ள குடிநீர் குழாயையும் அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி