பொங்கல் திருநாளில் புதிய பானையை தமிழக அரசு வழங்க வேண்டும். திருப்பூர் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை.
திட்டங்களை செயல்படுத்தினால் தான் முன்னேற்றம் இருக்கும். மாநில அரசின் ஐயப்பாடு களை கலைந்து திட்டங்களை கொண்டு வர வேண்டும். இதன் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்
ஏரி, குளங்களில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று வட்டாட்சியர் அனுமதி பெற்று எடுக்கலாம் என உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி.
மானியத்துடன் கூடிய கடனுதவி தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைப்பதை வரவேற்கிறோம்.
இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மழைக்கால நிவாரண நிதி 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
எங்கள் சமூக மக்களுக்கு சமூக நீதி கிடைக்க 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி பங்கீடு தரும் கட்சியுடன் எங்கள் அரசியல் நிலைப்பாடு இருக்கும் என தெரிவித்தனர்.