பல ஆண்டுகளாக சேதமடைந்த சாலை சீரமைக்க வேண்டும்

64பார்த்தது
திருப்பூர் காங்கயம் ரோட்டில் சிடிசி கார்னர் அருகே பல ஆண்டுகளாக சேதமடைந்த சாலை சீரமைக்க வேண்டும் என அதிமுக கவுன்சிலர் கண்ணப்பன் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள சிடிசி கார்னர் பகுதியில் காங்கேயம் கிராஸ் ரோடு முழுமையாக சேதமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட திறப்பு மூடிகள் சாலை உயரத்தை விட கூடுதலாக அமைக்கப்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இது மட்டுமில்லாமல் ஏ. எக்ஸ். என். செல்லும் சாலையில் சாக்கடைக்கு தரைமட்ட பாலம் அமைக்காததால் வாகன ஓட்டுகள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதை அடுத்து அந்த பகுதியில் மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன், எஸ்பிபி கட்சி மாவட்ட தலைவர் வி கே என் பாபு உள்பட கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டு, அந்தப் பகுதி சாக்கடை பாலம் மற்றும் சாலை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சாலையை சீரமைக்கா விட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி