ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தமிழகத்தில் அதிக அளவில் துவக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் புதிதாக துவங்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்து பத்தாயிரத்தை ஐந்நூறாக உயர்ந்துள்ளது எனவும், இதில் 4925 நிறுவனங்கள் பெண்களின் தலைமையில் இயங்குகின்றன எனவும், 2021 ஆம் ஆண்டில் 2300 நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளதாக ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் அதிக நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ள பட்டியலில் இந்தியாவில் 5வது மாநிலமாக தமிழகம் உள்ளது என குறிப்பிட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளது, அவற்றின் பெயர் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை எனவும், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தும் தங்களுக்கு அது குறித்த விவரங்கள் முழுமையாக கொடுத்தால் தான் மேலும் பலரை தொழில் தொடங்க ஊக்குவிக்க முடியும் எனவே புதிதாக துவங்கியுள்ள நிறுவனங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என ஸ்டார்ட் அப் இந்தியாவின் மென்டராக உள்ள திருப்பூரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் கேட்டுக்கொண்டார்.