மாவட்டம் முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடக்கிறது

1571பார்த்தது
மாவட்டம் முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடக்கிறது

தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருப்பூர் முதன்மை. மாவட்ட நீதிபதி குணசேகரன் தலைமையில் தேசிய மக்கள் நீதி மன்றம் இன்று (சனிக்கிழமை) மாவட்டம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி தலைமையில் தொடங்கியது.

இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வரைவோலை, எளிதில் சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் எடுத்து விசாரிக்கப்படுகிறது. அவினாசி, ஊத்துக் குளி, பல்லடம், காங்கயம், தாராபு ரம், உடுமலை, மடத்துக்குளம் கோர்ட்டுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடக்கிறது.

தொடர்புடைய செய்தி