திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 31ஆம் தேதி வெகு விமர்சையாக தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் திருவிழா டிசம்பர் 31ஆம் தேதி முதல் திருப்பாவை பராயணம் செய்து துவங்கியது. பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். அடுத்த பத்து நாட்கள் இரவு 10 உற்சவமும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான இன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. கனகவல்லி தாயார் மற்றும் பூமாதேவி சமேத ஸ்ரீ வீரராகவ பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனமும் அலங்கார பூஜை நடைபெற்றது, தொடர்ந்து கருட வாகனத்தில் வீரராகவ பெருமாள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்து
நம்மாழ்வார் மற்றும்
பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மூலவரை தரிசனம் செய்த பின்னர் வெளியில் வரும் பக்தர்களுக்கு ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் ஒரு லட்சம் 8 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.