தார் சாலை மேம்பாட்டு பணிகள்
கே. என். விஜயகுமார் எம். எல். ஏ. ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட பழைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முதல் சிவன் தியேட்டர் வரை ஏற்கனவே உள்ள சாலை தார்சாலையாக மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று திருப்பூர் வடக்கு தொகுதி எம். எல். ஏ. வும், அ. தி. மு. க. திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே. என். விஜயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பணிகளின் விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் எம். எல். ஏ. கேட்டறிந்தார். இதில் அ. தி. மு. க. காந்திநகர் பகுதி செயலாளர் கருணாகரன், வட்ட செயலாளர்கள் ஜெகநாதன், புண்ணியமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செய லாளர் பிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.