திருப்பூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள், மன மகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல் பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை மூடப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.