மின்கட்டண உயர்வு பிரச்சினைக்கு தீர்வு
காணதொழில் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்துக்கு ஆதரவு
நிட்மா சங்க கூட்டத்தில் முடிவு
தொழில் நிறுவனங்களில் மின்சார நிலைக்கட்டணம் உயர்வு, பீக் ஹவர் கட்டணம் உயர்வு, சூரியஒளி சக்தி மின்உற்பத் திக்கு கட்டணம் வசூலிப்பது ஆகியவை அனைத்து தொழில்து றையினரையும் பாதிப்பு உள்ளாக்கியிருக்கிறது. மின்கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நாளை (திங்கட்கிழமை) திருப்பூரில் அனைத்து தொழில் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றுவது, பின்னர் கருப்பு சட்டை மற்றும் பேட்ஜ் அணிந்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுப்பது என முடிவு செய்துள் ளனர். இதைத்தொடர்ந்து நேற்று நிட்மா சங்கத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் அகில் ரத்தினசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ராஜா மணி, இணை செயலாளர் கோபி ஆகியோர் முன்னிலைவகித்தனர். சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மின்சார கட்டண உயர்வு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைக்கு நிட்மா சங்கம் முழு ஒத்துழைப்பு வழங்குவது, நாளை காலை 9 மணிக்கு கலெக்டரை சந்திக்கும் நிகழ்ச்சியில் அனைவரும் தவறாமல் பங்கேற்பது, உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் நிறுவனங்களில் கருப்பு கொடி கட்டி ஒத் துழைப்பு அளிக்க வேண்டும். வருகிற 16-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் சங்கத் தின் சார்பாக திரளானவர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.