காவல் துறையின் சார்பில்விளையாட்டுப் போட்டிகள்!

70பார்த்தது
திருப்பூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாநகர காவல் துறையின் சார்பில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாக விளையாட்டுப் போட்டிகள்!



தமிழர் திருநாளாம் தைத்திருநாள் ஜனவரி 15ஆம் தேதி நாடெங்கிலும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருவிழாவை வெகு விமர்சையாக கொண்டாட உள்ள நிலையில் திருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாக விளையாட்டுப் போட்டிகள் திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கபடி, கிரிக்கெட், வாலிபால் செட்டில் கார்க் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் என போட்டிகள் நடைபெற்றது. இதே போல பெண்களுக்கு கபடி போட்டிகளும் ஓட்டப்பந்தய போட்டிகளும் நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு பொங்கல் விழா அன்று காவல்துறையின் சார்பில் பரிசுகள் வழங்கப்படுகிறது. போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் காவல்துறையைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அதேபோல பொதுமக்களில் ஆண்களும் பெண்களும் என ஏராளமானோர் ஆர்வமாக விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி