திருப்பூர் மாநகரில் புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் தனியார் ஓட்டலில் கேக் வெட்டி புத்தாண்டை ஆடல் பாடல் உடன் கொண்டாடினர்.
உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 2023 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. அதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் 12 மணி அளவில் புத்தாண்டு பிறந்ததை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து கூறிக் கொண்டனர்.
திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடும் விதமாக தனியார் ஓட்டலில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், டி.ஜே நிகழ்ச்சி, குடும்பங்களுக்கு விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றில் பங்கேற்று கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.