கிறிஸ்துமஸ் பண்டிகையின் முன்னோட்டமாக திருப்பூர் குமரன் சாலையில் உள்ள புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் ஒப்புரவு அருட்சாதன சிறப்பு திருப்பலி பங்குதந்தை அருள் ஜெபமாலை தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. அருட்பணி கிளாடியஸ் கலந்து கொண்டு சிறப்பு இறைவசனம் வழங்கினார். அருட்பணி அலெக்ஸ் குணமளிக்கும் ஆராதனையை மற்றும் துதி ஆராதனையை வழிநடத்தினார். இதில் பல்வேறு பணித்தளங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட குருக்கள் பங்கேற்றனர். மக்கள் நிறைவான ஆசீர்வாதத்துடன் வீடு திரும்பினார்கள். முடிவில் அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆலய உதவிபங்குதந்தை சகாயராஜ், துணைத்தலைவர் டோனி, செயலாளர் ஏ. கே. ஆர். வினோத், பங்கு பேரவை நிர்வாகிகள் பீட்டர், மெல்வின் பாபு, ஆல்பர்ட், விக்டர், இருதயராஜ், பெர்னார்டு உள்பட பங்கு பேரவை உறுப்பினர்கள், அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் ஆலய மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.