திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்!

1563பார்த்தது
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள சின்னசாமி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரிசி கடை வீதி பகுதியில் அமைந்துள்ள கேஎஸ்சி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பலரும் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் வந்து தங்களது வீடுகளுக்கு பேருந்து மூலமாக செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று(செப்.4) மாலை கேஎஸ்சி பள்ளி மாணவனை 50க்கும் மேற்பட்ட சின்னசாமி பள்ளி மாணவர்கள் இணைந்து கட்டை, பிளாஸ்டிக் பைப் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேருந்து நிலையத்தின் நாளாபுறமும் இருந்து வந்த மாணவர்கள் கட்டை, பைப் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு கத்தியபடியே மாணவனை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனால் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி