தொழிலாளர்களுக்கு பொது பயிற்சி வசதி அமைக்க திட்டம்

76பார்த்தது
தொழிலாளர்களுக்கு பொது பயிற்சி வசதி அமைக்க திட்டம்
பனியன் தொழில் நகரான திருப்பூருக்கு வெளிமாநில, வெளி மாவட்ட தொழிலாளர்கள் அதிகம் வந்து தங்கி பணியாற்றி வருகிறார்கள். இவ்வாறு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், அவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் திருப்பூரில் ஒரு பொதுவான பயிற்சி வசதியை அமைக்க திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கமும், எக்ஸிம் வங்கியும் சேர்ந்து செயல்பட உள்ளன.

ஏற்கனவே எக்ஸிம் வங்கி நாடு முழுவதிலும் உள்ள 6 மாவட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. அதில் ஏற்றுமதி திறனை மேலும் மேம்படுத்துவதற்கு ஏற்றுமதியில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. எக்ஸிம் வங்கி, ஏற்றுமதியை மேலும் ஊக்குவிக்கும் தொழில்களில் திருப்பூர் பின்னலாடைத்துறையை தேர்வு செய்து நடைமுறைப்படுத்த ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் இணைந்துள்ளது. இந்தநிலையில் எக்ஸிம் வங்கி அதிகாரிகள் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் சந்தித்தனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே. எம். சுப்பிரமணியன், இணை செயலாளர் குமார் துரைசாமி, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றார்கள். வங்கியின் தரப்பில் இருந்து பொதுமேலாளர் தர்மேந்திர சச்சன், துணை பொது மேலாளர் ராகுல் மஜூம்தார், முதன்மை மேலாளர் குஷால் கிரி மற்றும் வெளிநாட்டு வர்த்தக உதவி இயக்குனர் மேரி ரத்தினம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி