ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

75பார்த்தது
ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில்
மரக்கன்றுகள் நடும் விழா

சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையில் திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் உத்தரவின்படி நீதிமன்ற வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.
விழாவில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், சிறப்பு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிபதி பாலு, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்லத் துரை, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழு செயலாளரும் முதன்மை சார்பு நீதிபதியு மான ராமச்சந்திரன் உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

தொடர்புடைய செய்தி