. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணிக்காக கிறிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்தில் சுமார் 430 ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கு
2021ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி 761 ரூபாய் ஊதியம் தர வேண்டிய நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு 534 மட்டுமே கொடுப்பதாகவும், பாதுகாவலர்களுக்கு 580 ரூபாய் மட்டுமே கொடுப்பதாகவும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்குவதில்லை எனவும் தங்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் உரிய சம்பள தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நிலையில் கிரிஸ்டல் தனியா ஒப்பந்த நிறுவன போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் ஊதியம் முறையாக வழங்க கோரியும் துப்புரவு மற்றும் பாதுகாப்பாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.