திருப்பூர் மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் ரூ. 3 கோடியே 78 லட்சத்து 64 ஆயிரத்து 71 மதிப்பிலான பொருட்கள் பறிமு தல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக ரூ. 81 லட்சத்து 58 ஆயிரத்து 918 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ. 1 கோடியே 77 லட் சத்து 38 ஆயிரத்து 891 மதிப்பிலான பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 178 பணம் பறிமுதல் வழக்குகள் தொடுக்கப்பட் டதில், 134 வழக்குகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட் டதால் பணம் விடுவிக்கப்பட்டுள்ளன. 47 வழக்குகள் நிலுவை யில் உள்ளதாக தேர்தல் செலவின பிரிவு பொறுப்பு அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.