கோழிக் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

58பார்த்தது
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ மருத்துவமனை அருகில் இறைச்சி கடையிலிருந்து வெளிவரும் ரத்தத்தினால் துர்நாற்றம் வீசுவதாகவும் நோய் தொற்று அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கடை முன்பு வாக்குவாதம்.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு 31 வது வார்டு டி எஸ் ஆர் லேஅவுட் பகுதியில் சிக்கன் கடையில் கோழி கழிவுகள் மற்றும் இரத்தம் சாக்கடை கால்வாயில் கலந்து வருவதாக பல மாதங்களாக கடை மேலாளர் இடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆறு மாதங்களுக்கு மேலாக நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஒன்று கூடி கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் சமாதானம் செய்தனர். கோழிக் கழிவு, மற்றும் இரத்தம் சாக்கடை கால்வாயில் இனிமேல் கலக்காது என்று தெரிவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி