திருப்பூர்-காங்கயம் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதிய சங்க கிளை தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார்.
ஈரோடு மண்டல பொருளாளர் நாச்சிமுத்து, ஈரோடு மண்டல தலைவர் ஜெகநாதன், பல்லடம் கிளை செயலாளர் கனகராஜ், கருமத்தம்பட்டி குணசேகரன், தாராபுரம் வெள்ளசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மண்டல பொதுச் செயலாளர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். இதில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 108 மாத நிலுவையுடன் டி.ஏ. உயர்வு வழங்க வேண்டும். ஓய்வுகால பணப்பலன்கள், வாரிசு வேலை தாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முடிவில் திருப்பூர் கிளை செயலாளர் ராஜேந்திரன் நன்றியுரை வழங்கினார்.