திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 63 வேலம்பாளையம் பகுதி ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: திருப்பூர் 63 வேலம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் கடந்த 50 வருடங்களாக ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
எங்கள் பகுதியில் பல குடும்பத்தினர் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறோம். இந்த பகுதியில் உள்ள அனைவரும் விவசாய கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். எங்களுக்கு சொந்த வீடோ, சொந்தமாக நிலமோ எதுவும் இல்லை. எனவே பகுதியில் உள்ளவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.