திருப்பூர் மாநகர காவல் துறை ஆணையர். லட்சுமி அவர்களின் உத்தரவின்படி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் திருப்பூர் KVR நகர் சரகத்தின் சார்பில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் KVR நகர் சரக உதவி ஆணையர். நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் KVR நகர் சரக்கத்தில் உள்ள தெற்கு காவல் நிலையம், KVR நகர் காவல் நிலையம், தெற்கு மகளிர் காவல் நிலையம், தெற்கு குற்றப்பிரிவு, கேவிஆர் நகர் குற்றப்பிரிவு ஆகிய காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்டு நிலுவையில் இருந்த மனுக்களுக்கு காவல்துறையினர் சார்பில் உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் தீர்க்கப்படாமல் இருக்கக் கூடிய மனுக்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.