விடுமுறை நாட்களில் கூடுதல் ரயில் இயக்க பொதுமக்கள் கோரிக்கை.
பின்னலாடை நகரான திருப்பூரில் அதிக அளவிலான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் விடுமுறை மற்றும் பண்டிகை தினங்களில் தங்களது சொந்த ஊருக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று(செப்.7) காலை திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக சென்னை செல்லும் கோவை-சென்னை இன்டர்சிட்டி ரயிலில் வழக்கத்தைவிட அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.
பயணிகள் ஒருவருக்கொருவர் முந்தி அடுத்துக் கொண்டும், ஃபுட்போடு களிலும் பயணித்தனர். இது போன்ற பண்டிகை தினங்களில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை வைத்துள்ளனர். வழக்கமாக இரண்டு நிமிடங்கள் மட்டுமே நிற்கும் இன்டர்சிட்டி ரயில் இன்று சுமார் 10 நிமிடம் வரை நின்று சென்றது குறிப்பிடத்தக்கது.