மக்கள் ஜனநாயகம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

71பார்த்தது
மாநகராட்சி வரி உயர்வை ரத்து செய்ய கோரி மக்கள் ஜனநாயகம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி சொத்து வரி, குப்பை வரி என அனைத்து வித வரி உயர்வை ரத்து செய்ய கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் எதிரில் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், திருப்பூரில் தற்போது தொழில் நலிவடைந்துள்ளதாகவும், திருப்பூரை விட்டு வேறு ஊருக்கு செல்லும் அபாய சூழ்நிலை நிலவக்கூடிய நிலையில் வரிகளை உயர்த்திய மாநகராட்சி கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் சொத்தை விற்று சொத்து வரையும், வீட்டை விற்று வீட்டு வரியும் கட்டக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும், எந்த மாநகராட்சியிலும் இல்லாத அளவிற்கு திருப்பூர் மாநகராட்சியில் வரி அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்திற்கு அதிமுக, எஸ். டி. பி. ஐ. , தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி