கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அமித்ஷா பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் குறித்து தவறான பதிவை பதிவு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் பொது வழியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அமித்ஷாவின் திருவுருவப்படத்தை தீயிட்டு கொளுத்தியும் கிழித்தெறிந்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது கண்டன பதிவை பதிவு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.