திருப்பூர் குமார் நகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக் குட்பட்ட ராமமூர்த்தி நகர், பி. என். ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ. ஆர். பி. நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ். வி. காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ. ஊ. சி. நகர், டி. எஸ். ஆர். லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என். ஆர். கே. புரம், வெங்க டேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம். எஸ். நகர், புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தெரிவித்து உள்ளார்.