திருப்பூர்: விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க மனு

58பார்த்தது
திருப்பூர்: விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க மனு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மங்கலம், அவினாசி பகுதி விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: -பல்லடம், கண்ணம்பாளையம், அவினாசி, தெக்கலூர், மங்கலம், 63 வேலம்பாளையம், புதுப்பாளையம், பெருமாநல்லூர் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். 

இந்த தொழிலாளர்கள் இயக்கும் விசைத்தறிகளின் எண்ணிக்கை 8-ல் இருந்து 16 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் தொழிலாளியின் உடல் உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைக்கவில்லை. விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் 2022-ம் ஆண்டு ஏற்பட்டு 37 மாதங்கள் ஆகிறது. ஆனால் ஒப்பந்தப்படி கூலி வழங்கப்படவில்லை. அத்தியாவசியமான அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் குடும்பங்களின் கல்வி, மருத்துவம், உணவு பொருட்களுக்காக கூடுதலாக செலவாகிறது. 

எனவே கலெக்டர் தலையிட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து பேசி கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி