திருப்பூர் மாவட்டத்தில் 8 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அரிசி பெறும் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழுக்க ரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகளில் மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 2 கார்டுகள் உள்ளன. சர்க்கரை கார்டுகள், முதியோர் ஓய்வூதியம் பெறும் கார்டுகள் என 7 லட்சத்து 98 ஆயிரத்து 856 கார்டுகள், 324 இலங்கை தமிழர் கார்டுகள் என மொத்தம் 7 லட்சத்து 99 ஆயிரத்து 180 கார்டுகளுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.