திருப்பூர் மாநகர நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் கைதான சூர்யா என்பவர் நீதிமன்ற காவலில் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் சிறையில் இருந்த இரும்பு கம்பி வலையின் வழியே கடந்த 21ஆம் தேதி தப்பி சென்றார்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை தேடி வந்த நிலையில், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறையில் பணியாற்றிய காவலர்கள் ஐந்து பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில் சூர்யாவின் சொந்த ஊரான தூத்துக்குடி பேருந்து நிலையப் பகுதிகளில் சுற்றித் திரிவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.