தலைக்கவசம் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு

61பார்த்தது
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணியாமல் செல்லும்போது ஏற்படும் விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வகையில் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகரில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வில் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டுகளை நேர்த்தி அவர்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் வாகன ஓட்டுகள் சாலை விதிகளுக்கு உட்பட்டு பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே தெற்கு போக்குவரத்துக் காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வில் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆனந்தன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதேபோல் இன்று மாநகர பகுதி முழுவதும் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி