திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சார்பில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: -
ஊத்துக்குளி, ரெட்டிபாளையம், சென்னிமலை பாளையம், முத்தம்பாளையம் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூக மக்களின் சார் பாக ஜமாபந்தி நிகழ்ச்சியிலும், குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் மனு அளித்துள்ளோம். 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட நிலத் தில் இரண்டு, மூன்று குடும்பங்களாக நெருக் கடியில் வாழ்ந்து வருகிேறாம்.
சென்னிமலைபாளையம் பகுதியில் ஆய் வுக்கு வந்த கிராம உதவியாளர் மற்றும் அலு வலர்கள் பழைய பட்டாக்களை மனுதாரர் பெயரில் பிரித்து தருவதாக கூறியுள்ளனர். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள் ளது. இங்கு உள்ளவர்கள் தூய்மை பணியா ளர்களாகவும், கூலி வேலைக்கும் செல்கின்றனர்.
எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேறு இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.