திருப்பூர்: மாநகராட்சி வரி உயர்வுகளை ரத்து செய்யக்கோரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சொத்து வரி, குப்பை வரி, பாதாள சாக்கடை வரி உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட வரி இனங்களை ரத்து செய்து பழைய வரிமுறையே செயல்பட வேண்டும் எனக் கோரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.