சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் மனு

82பார்த்தது
சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் மனு
அரசு அங்கீகாரம் இன்றி ரெட் டாக்ஸி நிறுவனம் செயல்படுவதாகவும் திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள அலுவலகத்தை அகற்ற வேண்டும் என சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் அலுவலகம் அமைத்து ரேட் கால் டாக்ஸி நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம் முறையான அனுமதி இன்றி இயங்கி வருவதாகவும் இதன் ஓட்டுநர்கள் உரிமம் இல்லாமல் நியமிக்கப்படுவதாகவும் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் வாகனத்தின் மேற்கூறையில் வர்ணம் பூசப்பட்டும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் கடந்த சில மாதங்களில் 59 வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் முறையான அனுமதி பெறாமல் திருப்பூர் ரயில் நிலையத்தில் இயங்கி வரும் ரெட் கால் டாக்ஸி நிறுவனத்தை மூட வேண்டும் என கோரி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம், ஆல் ட்ராக் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கம் சார்பில் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி